புதுடில்லி, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் விபத்து தடுப்பு பணிகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, விமான பாதுகாப்பு பிரிவின் தலைவர் ராஜிவ் குப்தாவை, ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்து, விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
‘டாடா’ குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை குறித்து பல்வேறு புகார்கள் அவ்வப்போது எழுகின்றன.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் விமான போக்குவரத்துத்துறை இயக்குனரகம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் உள் தணிக்கை, விபத்து தடுப்பு பணிகள், தொழில்நுட்ப பிரிவில் தேவையான மனிதவளம் உள்ளிட்டவை குறித்து விமான போக்குவரத்துத்துறை இயக்குனரகத்தின் ஒழுங்குமுறை குழு சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
அப்போது, விபத்து தடுப்பு பணிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
அங்கீகரிக்கப்பட்ட விமான பாதுகாப்பு கையேடு மற்றும் பயணியர் விமானப் போக்குவரத்து சேவைக்கு தேவையான அம்சங்கள் பின்பற்றப்படாததால், ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பாதுகாப்பு பிரிவின் தலைவர் ராஜிவ் குப்தாவை ஒரு மாத காலத்துக்கு சஸ்பெண்ட் செய்து, விமானப் போக்குவரத்துத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement