புதுடில்லி, கேரளாவில், தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் கண்ணுாரைச் சேர்ந்த ரதீஷ் என்பவர், 2019 – 2020 இடைப்பட்ட காலத்தில், துாதரக வழிகளை பயன்படுத்தி, பல்வேறு நாடுகளில் இருந்து, நம் நாட்டிற்கு ஏராளமான தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.
இவர் உட்பட 20 பேருக்கு எதிராக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், 2021 ஜனவரியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், கடத்தி வரப்பட்ட தங்கத்தை, திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கு, ரதீஷ் விற்பனை செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டு களாக என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து வந்த ரதீஷ், சமீபத்தில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார்.
அப்போது, அவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். ரதீஷை காவலில் எடுத்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement