திருப்பதி, :திருமலையில் அமைக்கப்பட்ட கூண்டில் ஆறாவது சிறுத்தை பிடிப்பட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் சமீபத்தில் சிறுத்தை தாக்கியதால், ஒரு சிறுமி உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருமலை வனப் பகுதியில் ஆப்பரேஷன் சிறுத்தை துவங்கப்பட்டது. இதன்படி திருமலை வனத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஏற்படுத்தி, சிறுத்தை அதிகம் நடமாடும் பகுதியில் வனத்துறையின் கூண்டுகளை அமைத்தனர். அதில் இதுவரை, ஐந்து சிறுத்தைகள் பிடிபட்ட நிலையில், நேற்று ஆறாவது சிறுத்தை பிடிபட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement