”அரசியல் தலைவர்களில் மிகுந்த பலம் மிக்கவர் ஜெயலலிதா. அவர், தைரியம் மிக்க தலைவர் என்பதை ஏற்கிறேன். இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு பிரச்னை இல்லை,” என, தி.மு.க., – எம்.பி., கனிமொழி லோக்சபாவில் பேசினார்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், தி.மு.க., – எம்.பி., கனிமொழி பேசியதாவது:
மசோதா கொண்டு வந்தது மகிழ்ச்சி தான். ஆனால், எப்போது அமலாகும் என்பது தெரியாதே. அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது மத்திய அரசு.
ஒரு ஆண், பெண்ணாக மாறும்போது கடவுளாக கொண்டாடப்படுகிறார். ஆனால், ஒரு பெண், ஆணாக மாறி வீரத்தைக் காட்டினால் அதை ஏற்பதில்லை; பேய் என்று கூறும் நிலை உள்ளது.
பெண்களின் தைரியத்தை மதிக்க மறுப்பது ஏன்? அரசியலில் இந்திரா போன்ற தலைவர் இருந்தாரே. ஜெயலலிதா மிகவும் பலம் வாய்ந்த தலைவர். அவர் தைரியம் மிக்க தலைவர் என்பதை ஏற்கிறேன்.
அவரை உறுதியான தலைவர் என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு பிரச்னை இல்லை. ஜெயலலிதா மிக மிக பலம் வாய்ந்த அரசியல் தலைவர் தான். இந்த வரிசையில் தற்போது சோனியா, மாயாவதி, மம்தா பானர்ஜி மற்றும் மறைந்த சுஷ்மா சுவராஜ் என பல பெண் தலைவர்களை கூறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
– நமது டில்லி நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement