பாகிஸ்தான்: வங்கியில் செலுத்த வைத்திருந்த ரூ.1.71 கோடி பணத்துடன் வேன் ஓட்டுநர் தப்பியோட்டம்

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் கொராங்கி பகுதியில் அவாமி காலனி என்ற இடத்தில் தொழில்பேட்டை பகுதியில் வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக வேன் ஒன்றில் பணம் கொண்டு செல்லப்பட்டது.

அந்த வேனில் ரூ.1.71 கோடி (60 மில்லியன் பாகிஸ்தான் கரன்சி) பணம் இருந்துள்ளது. இந்த நிலையில், வேன் ஓட்டுநர் அந்த பணம் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு வேனை விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.

இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதில், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அந்நபர் பஞ்சாப் மாகாணத்தின் வெஹாரி பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், கராச்சி நகரில் சந்திரிகார் சாலையில் உள்ள வங்கி ஒன்றில் பணம் செலுத்துவதற்காக தனியார் நிறுவனத்தின் வேன் ஒன்று சென்று உள்ளது. அதன் பாதுகாவலர்கள் வங்கிக்கு பணம் செலுத்த சென்ற சந்தர்ப்பத்தில், வேன் ஓட்டுநர் வாகனத்தில் இருந்த ரூ.5.83 கோடி பணத்துடன் தப்பியோடினார்.

இதுபற்றி மீத்தடர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வாகன ஓட்டுநர் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு எதிராக வழக்கு பதிவானது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.