வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அகர்தாலா: இன்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான அவசர வழி கதவை திறக்க முயன்று தகராறில் ஈடுபட்ட பயணி கைது செய்யப்பட்டார்.
அசாமின் கவுஹாத்தியிலிருந்து, திரிபுராவின் அகர்தாலாவுக்கு இன்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான பயணி ஒருவர் அவசர கதவை திறக்க முயன்றதுடன், விமான பைலட்டுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விமானம் திரிபுராவின் அகர்தாலா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பயணியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெயர் பிஸ்வஜித் திபேநாத், 41 என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement