இந்தியா Vs ஆஸ்திரேலியா: பிளேயிங் XI-ல் ஷ்ரேயாஸ் ஐயர், அஸ்வின் இடம்பெறுவார்களா?

இந்தியா – ஆஸ்திரேலியா

செப்டம்பர் 22 ஆம் தேதியான இன்று மொஹாலியில் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில், விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 3வது ஒருநாள் போட்டியில் அணிக்கு திரும்ப இருக்கின்றனர். ரோஹித் இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துவதுடன் விக்கெட் கீப்பிங் பணியிலும் ஈடுபடுவார். ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஒருநாள் போட்டிக்கான அணியில் விளையாட இருக்கிறார். குறைந்தபட்சம் முதல் இரண்டு போட்டிகளிலாவது அவர் விளையாடும் 11-ல் இடம்பெற வாய்ப்புள்ளது.

பிளேயிங் லெவனில் அஸ்வின்?

ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டிகளுக்கான மற்றொரு சுவாரஸ்யமான தேர்வு, ஆஃப் ஸ்பின்-பவுலிங் ஆல்-ரவுண்டர் ஆர் அஷ்வின். ஆசிய கோப்பை 2023 முடிந்த பிறகு, இந்திய கேப்டன் ரோஹித் அஷ்வினுடன் தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறியிருந்தார். அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், உலகக் கோப்பைக்கு அஷ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரை இந்தியா தேர்வு செய்யலாம். அக்சர் உலகக் கோப்பை அணியின் ஒரு அங்கமாக இருக்கிறார். ஆனால் அவர் ஆசிய கோப்பை 2023 பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின்போது காயமடைந்தார். அவரது தொடையில் காயம் ஏற்பட்டு இப்போது சிகிச்சையில் இருக்கிறார்.

ஸ்ரேயாஸ் ஐயர் திரும்புகிறார்

முதல் ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஆர் அஷ்வின் இருவரும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஆசிய கோப்பையின்போது ஐயருக்கு முதுகு வலி ஏற்பட்டதால் பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஐயர் தற்போது குணமடைந்துள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் அவர் எப்படி விளையாடுவார்? என்பதை தேர்வாளர்கள் கவனிக்க உள்ளனர். அஸ்வின் மீதும் ஒரு கண் வைக்கப்பட்டுளகளது. அவர் தனது கடைசி ஒருநாள் போட்டியை ஜனவரி 2022-ல் விளையாடினார். சிறப்பாக விளையாடினால் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில், கை முறிவு காரணமாக அவுட்டான டிராவிஸ் ஹெட் விளையாடவில்லை. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அணிக்கு திரும்பியுள்ளனர். ஹெட் இல்லாத சூழலில் ஆஸ்திரேலியா இந்த ஒருநாள் போட்டிகளுக்கு தொடக்க ஆட்டக்காரராக மிட்செல் மார்ஷைப் பயன்படுத் உள்ளது. ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இடம்பெற வாய்ப்புள்ளது. 

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: இஷான் கிஷன், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (WK), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.