வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள மென்பொருளை தணிக்கை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்து உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், சுனில் ஆஹ்யா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தேர்தல் ஆணையத்தின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் மென்பொருள், ஜனநாயகத்தைப் பற்றியது.
‘எனவே, அதை, தனி அதிகாரம் படைத்த ஒரு அமைப்பின் தணிக்கைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்’ என, கோரியிருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதில் அந்த அமைப்பு அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்பட்டதாக தெரியவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகப்படும்படியாக எதுவும் இல்லை. எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement