டொரன்டோ, கனடாவின், ‘பைவ் ஐ உளவு நெட்வொக்’ அமைப்பு அளித்த உளவு தகவல்களின் அடிப்படையில் தான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியா மீது குற்றச்சாட்டை முன்வைத்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18ல், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தீவிர விசாரணை
இந்த கொலையில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு பார்லிமென்டில் சமீபத்தில் தெரிவித்தார்.
இது இந்தியா – கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டு அபத்தமானது, உள்நோக்கம் உடையது என, இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கனடாவுக்கான இந்திய துாதரை அந்நாட்டு அரசு வெளியேற உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக, இந்தியாவுக்கான கனடா துாதரை மத்திய அரசு வெளியேற உத்தரவிட்டது.
கனடா குடிமக்களுக்கான இந்திய விசா வினியோகத்தை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமரின் குற்றச்சாட்டு குறித்து அந்நாட்டு ஊடகங்களில் பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி உள்ளன.
அதன் விபரம்:
கனடா நாட்டின் குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை குறித்து கனடா அரசு தீவிர விசாரணை நடத்தியது. பல மாதங்களாக நடந்து வரும் இந்த விசாரணையின் போது, பல்வேறு உளவு தகவல்கள் பெறப்பட்டு ஆராயப்பட்டன.
அதில், கனடாவுக்கான இந்திய துாதரக அதிகாரிகள் உட்பட சில இந்திய அதிகாரிகளின் தகவல் பரிமாற்றங்கள் ஆராயப்பட்டன. இந்த உளவு தகவல்கள் கனடாவில் இருந்து மட்டும் திரட்டப்படவில்லை.
கனடா அங்கம் வகிக்கும், ‘பைவ் அய்ஸ் உளவு கூட்டணி’ வாயிலாகவும் உளவு தகவல்கள் பெறப்பட்டன. அதில் தான் இந்த படுகொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் விவாதிக்க, கனடாவுக்கான தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு ஆலோசகர் ஜோடி தாமஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் நான்கு நாள் பயணமாக புதுடில்லி வந்தார்.
அதன் பின் செப்., மாதம், ஐந்து நாள் பயணமாக புதுடில்லி வந்தார். அப்போது நடந்த பேச்சின்போது, இந்திய அதிகாரிகள் குற்றச்சாட்டை மறுக்கவில்லை.
இவ்வாறு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
ஹிந்துக்களுக்கு மிரட்டல்!
இந்தியா – கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில், ‘வீடியோ’ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் ஹிந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இது குறித்து அந்நாட்டின் பொது பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கை:இதுபோன்ற, ‘வீடியோ’க்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது, அருவருப்பானது. கனடா மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது.கனடாவில் வெறுப்புணர்வுக்கு இடமில்லை. ஆக்கிரமிப்பு, வெறுப்பு, மிரட்டல் அல்லது பயத்தை துாண்டும் செயல்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை; அவை நம்மைப் பிளவுபடுத்த மட்டுமே உதவுகின்றன. கனடா மக்கள், ஒருவரையொருவர் மதிக்கவும், சட்டத்தை பின்பற்றும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உளவு கூட்டணி
இந்த விவகாரம் குறித்து கனடா ஊடகங்கள் செய்தி வெளியட தயாரானதை அறிந்த ஜஸ்டின் ட்ரூடோ, அவர்களை முந்திக்கொண்டு, பார்லி.,யில் குற்றச்சாட்டை முன்வைத்ததாக அந்நாட்டு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்தார். ஒருவேளை பிரதமர் பேச்சுக்கு முன் இந்த தகவல் ஊடகங்களில் கசிந்து இருந்தால், அரசு மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை சிதைந்துவிடும் என்பதால், ட்ரூடோ முந்திக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
பைவ் அய்ஸ் உளவு கூட்டணியில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
ஹர்ஜித் சஜ்ஜன்
ஹிந்துக்களுக்கு மிரட்டல்!
இந்தியா – கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில், ‘வீடியோ’ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் ஹிந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இது குறித்து அந்நாட்டின் பொது பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கை:இதுபோன்ற, ‘வீடியோ’க்களை பரப்புவது கண்டிக்கத்தக்கது, அருவருப்பானது. கனடா மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது.கனடாவில் வெறுப்புணர்வுக்கு இடமில்லை. ஆக்கிரமிப்பு, வெறுப்பு, மிரட்டல் அல்லது பயத்தை துாண்டும் செயல்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை; அவை நம்மைப் பிளவுபடுத்த மட்டுமே உதவுகின்றன. கனடா மக்கள், ஒருவரையொருவர் மதிக்கவும், சட்டத்தை பின்பற்றும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்