சென்னை கிராமங்களில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் ”திட்டக்குழு அரசை அறிவுறுத்தக்கூடிய அமைப்பாக உள்ளது. […]