திருமலை பிரம்மோற்ஸவம் கற்பக தருவில் மலையப்பஸ்வாமி| Malayappaswamy in Tirumala Brahmotsavam Karpaka Daru

திருப்பதி : திருமலையில் ஏழுமலையானுக்கு நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்ஸவத்தின், நான்காம் நாளான நேற்று மலையப்பஸ்வாமி, நினைத்ததை கொடுக்கும் கற்பக தருவில் மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் மாடவீதியில் வலம் வந்தார்.

திருமலையில் கடந்த, 18ம் தேதி ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக துவங்கி நடந்து வருகிறது. நான்காம் நாளான நேற்று காலை கல்பவிருட்ச வாகன சேவை நடந்தது. அதில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வைகுண்ட நாதன் அலங்காரத்தில் மலையப்பஸ்வாமி மாடவீதியில் வலம் வந்தார்.

கல்பவிருட்ச வாகனம்

பாற்கடலில் தோன்றிய விலையுயர்ந்த பொருட்களில் கல்பவிருட்சமும் ஒன்று. கல்ப மர நிழலின் கீழ் வருபவர்களுக்கு பசி இருக்காது. முற்பிறவி நினைவாற்றலும் ஏற்படும். மற்ற மரங்கள் பழுக்க வைக்கும் பழங்களை மட்டுமே தருகின்றன. கல்ப மரம் விரும்பிய பலன்களைத் தரும். கல்ப விருட்ச வாகன தரிசனம் மூலம் மலையப்பஸ்வாமி விரும்பிய வரங்களை வழங்குவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரம்மோற்ஸவ நாட்களில் வீதியுலா முடிந்த பின், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவர்களுக்கு பால், தயிர், தேன். இளநீர், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீரால் திருமஞ்சனம் நடந்தேறியது.

சர்வபூபால வாகனம்

பிரம்மோற்ஸவத்தின் 4ம் நாள் இரவு சர்வபூபால வாகன சேவை நடந்தது. ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தகளை பாடியபடி முன்செல்ல, கலைக்குழுவினர் கலைநிகழ்ச்சிகளை நடத்தியபடி பின் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.