சியோல்,
தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவராக லீ ஜே-மியுங் உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலைய கழிவுநீரை கடலில் கலக்கும் திட்டத்துக்கு அரசாங்கம் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் கடந்த 3 வாரங்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே லீ மீது ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் அங்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடியது. இதனால் அவர் மீது பிடிவாரண்டு பிறப்பிக்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இவருக்கு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால் இவரை கைது செய்ய தென் கொரிய அரசாங்கம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. எனினும் தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளை லீ முற்றிலும் மறுத்துள்ளார்.