சென்னை வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாக்கூட்டத்தில் தாம் மணியம்மையாரைக் குறித்து தவறாகப் பேசவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி அன்று வேலூரில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் பல திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அமைச்சர் துரைமுருகன் தனது உரையில் பெரியாரின் மனைவி மணியம்மையாரைக் குறித்து தவறாகப் பேசியதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்குப் பதிலாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “செப.டம்பர்17 […]