Flipkart Big Billion Days Sale 2023: பிளிப்கார்ட் மெகா சேல் தொடங்கும் தேதி! மலைக்க வைக்கும் ஆஃபர்

தீபாவளி மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி பூஜை உள்ளிட்ட பண்டிகை காலம் விரைவில் நெருங்கி வருவதால், ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான பிளிப்கார்ட், பிக் பில்லியன் டேஸ் விற்பனையை விரைவில் தொடங்க உள்ளது. iPhone 13, Samsung Galaxy F54, Pixel 7a மற்றும் பல பிரபலமான தயாரிப்புகள் வரவிருக்கும் Flipkart விற்பனையின்போது குறைக்கப்படும் என்று பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் ஈ-காமர்ஸ் நிறுவனமானது விற்பனை தேதியை இன்னும் வெளியிடவில்லை என்றாலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. உத்தேச தேதிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை 2023

பிளிப்கார்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்பாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனை நடத்தும். இந்த விற்பனையின்போது மெகா தள்ளுபடிகள், ஆஃபர்கள் மற்றும் கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதனைப்போலவே இந்த ஆண்டும் பிளிப்கார்ட் பிக் பில்லியன்ஸ் டே விற்பனை விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் எலக்டிரிக்கல் சலுகைகள் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கும். இந்த விற்பனையை லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்

Flipkart Big Billion Days Sale 2023: ஸ்மார்ட்போன்களில் சலுகைகள்

Samsung Galaxy F54, iPhone 13, Pixel 7a, Poco X5 Pro, Samsung Galaxy S23 Ultra, Redmi Note 12 Pro, Samsung Galaxy A34, Poco F5, Samsung Galaxy A23, Oppo Reno 10, Motorola Edge 40, Motorola G54 போன்ற ஸ்மார்ட்போன்கள் Samsung Galaxy F13 மற்றும் பல குறிப்பிடத்தக்க சலுகைகளைப் பெற வாய்ப்புள்ளது. 

Flipkart Big Billion Days Sale 2023: Apple iPhoneகளில் சலுகைகள்
 
ஐபோன் 14-ஐ குறிப்பாகக் குறிப்பிடவில்லை என்றாலும், எதிர்பார்த்த விலை குறைப்புகள் மற்றும் தள்ளுபடிகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13-க்கு கூடுதல் தள்ளுபடி இருப்பது டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஐபோன் தள்ளுபடியை எதிர்பார்த்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 

Flipkart Big Billion Days Sale 2023: டீசர்

Flipkart Big Billion Days விற்பனையின் டீஸர், பிளிப்கார்ட் இணையதளம் தள்ளுபடி செய்யப்படும் போன்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட டீல்களை குறிப்பிடவில்லை. ஒவ்வொரு ஸ்மார்ட்போன் பிராண்ட் ஒப்பந்தமும் இணையதளத்தில் எப்போது இடம்பெறும் என்பதற்கான தேதிகளை Flipkart குறிப்பிட்டுள்ளதால், இந்த 5G ஃபோன் பேரம் பற்றிய துல்லியமான விலைத் தகவல்கள் சுமார் 10 நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.