சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான படம் மெட்ராஸ். வட சென்னை மக்களின் வாழ்வியலை படம்போட்டு காட்டியது இந்தப் படம். கார்த்திக் கேரியரில் பெஸ்டாக அமைந்தது. படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கேத்தரின் தெரேசா நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.