IND vs AUS: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ருதுராஜ் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், கில் – ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வலுவான நிலைக்கு இட்டுச்சென்றது.
சூர்யகுமாரின் சூறாவளி ஆட்டம்
அந்த ஜோடி 200 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. 105 ரன்கள் எடுத்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்த நிலையில், கில் 104 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த சற்று நேரம் அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் கேஎல் ராகுல் உடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை பதம்பார்த்தார் எனலாம்.
ராகுல் ஒருமுனையில் நிதானம் காட்ட, மறுமுனையில் சூர்யகுமார் பவுண்டரிகளை மழை பொழிந்தார். குறிப்பாக, கேம்ரூன் கிரீன் பந்துவீச்சில் 4 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார். ராகுல், சூர்யகுமார் இருவரும் அரைசதம் அடித்தனர். இருப்பினும், ராகுல் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து சூர்யகுமார் இந்தியாவை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.
மறக்குமா நெஞ்சம்
அதன்படி, 50 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை பதிவுசெய்தது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் கேம்ரூன் கிரீன் 103 ரன்களையும், அபாட் 91 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். ஒருநாள் அரங்கில், இதுவரை 6 முறை 400 ரன்களை கடந்துள்ள இந்திய அணி, இப்போட்டியில் 1 ரன்னில் ஏழாவது முறையாக 400 ரன்களை எட்டும் வாய்ப்பை தவறவிட்டது.
குறிப்பாக, இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 418 ஆகும். இதே இந்தூர் மைதானத்தில் 2011ஆம் ஆண்டில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி இந்த ஸ்கோரை அடித்தது. அந்த போட்டியில் சேவாக் 219 ரன்களை குவித்தது யாராலும் மறக்க முடியாதது. அந்த போட்டியில் சேவாக் கேப்டனாக செயல்பட்டார். கம்பீர் 67 ரன்களையும், ரெய்னா 55 ரன்களையும் அந்த போட்டியில் எடுத்தனர். மேலும், மேற்கு இந்திய தீவுகள் 265 ரன்களில் ஆல்-அவுட்டாகி, 153 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
வெற்றிகரமான சேஸிங்
மேலும், 400 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியுள்ளது. ஒருநாள் அரங்கில், ஒட்டுமொத்தமாக 435 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது. 2006இல் ஜோகனனஸ்பெர்க்கில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து, 434 ரன்களை குவித்த நிலையில், தென்னாப்பிரிக்கா அதனை வெற்றிகரமாக சேஸ் செய்தது. அந்த போட்டியில் கிப்ஸ் 175 ரன்களை அடித்தார். அதேபோல, 2016இல் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 372 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தது இரண்டாவது சாதனையாக இருந்தது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா 400 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தால், தென்னாப்பிரிக்காவை கீழே தள்ளி அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்புள்ளது. தற்போது பேட்டிங் செய்துவரும் ஆஸ்திரேலியா ஆரம்பக் கட்டத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR