வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: உலக நாடுகள் பேசும்போது சரியான விஷயங்களை பற்றி பேசி விட்டு, இரட்டை நிலைப்பாடுகளை கொண்டவர்களாக உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் மத்திய வெளித்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பொருளாதார ரீதியாக இன்று ஆதிக்கம் செலுத்த கூடியவர்கள், தங்களுடைய உற்பத்தி சார்ந்த திறன்களை மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றனர். உண்மையில், அந்த திறன்களில் பல விசயங்களை ஆயுதங்களாக அவர்கள் மாற்றி வைத்திருக்கின்றனர்.
உலகளவில் வளர்ச்சிக்கான மனப்பாங்கு உள்ளது. உலகளாவிய தெற்கு பகுதி நாடுகள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளன. ஆனால், அரசியல் ரீதியிலான எதிர்ப்பும் உள்ளது
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செல்வாக்கு மிக்க பதவிகளில் இருப்பவர்கள் அனைவரும் மாற்றத்திற்கான அழுத்தங்களை எதிர்க்கிறார்கள்.
உலக நாடுகள் பேசும்போது சரியான விஷயங்களை பற்றி பேசி விட்டு, இரட்டை நிலைப்பாடுகளை கொண்டவர்களாக உள்ளனர் ஒரு பகுதி கொரோனா பரவல் மற்றும் ஒரு பகுதி உக்ரைன் விவகாரத்தில் கவனம் என சர்வதேச பேச்சுவார்த்தைகளில் இருந்து மற்ற விஷயங்களை பேச மறுத்துவிட்டன.
அரசியல் விருப்பத்தை விட, மாற்றத்திற்கான அரசியல் அழுத்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். உலகம் எதைப் பற்றி பேச விரும்புகிறது என்பதைப் பற்றி பேசுவதற்கு உண்மையில் ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பை பெற வேண்டும். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement