கன்னியாகுமரி கன்னியாகுமரியில் ஞாயிறு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்ட் தலமான கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கிறார்கள். வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் சீசன் காலங்களில் மட்டும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கமாகும். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கன்னியாகுமரிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. […]