சிரஞ்சீவி படத்தில் மூன்று கதாநாயகிகள்!
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் 157வது படத்தை பீம்பிஷரா பட இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இதன் முன் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற நவம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது என கூறப்படுகிறது.
பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தில் ஜஸ்வர்யா ராய், அனுஷ்கா ஷெட்டி, மிருணாள் தாகூர் என மூவரும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.