வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் வரும் 30 ம் தேதி பா.ஜ., சார்பில் நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
தெலங்கானா மாநில சட்டசபைக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆளும் பாரத் ராஷ்டீரிய சமிதி மற்றும் காங்., பா.ஜ., உள்ளிட்டகட்சிகள் தேர்தலை எதிர்நோக்கி அதற்கான பணிகளை வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பா.ஜ.,வும் தீவிரமாக களப்பணி செய்து வருகிறது. அதன்ஒரு கட்டமாக வரும் 30 ம் தேதி தெலங்கானா மாநிலத்தின் மகபூப் நகரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். என மாநில பா.ஜ., பொது செயலாளர் பிரேமேந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
மேலும் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான ஜி கிஷன் ரெட்டி மற்றும் பிற கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்வதன் மூலம் கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு அதிகரிக்கும் என பா.ஜவினர் நம்பிக்கை வைத்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
இந்தாண்டு இறுதியில் மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக தேர்தல் ஆணையம் தெலங்கானாவிற்கு விரைவில் வர உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement