இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ‛டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‛பவுலிங்’ தேர்வு செய்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது போட்டி இன்று (செப்.,24) மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடக்கிறது. ‛டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா முதலில் களமிறங்குகிறது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நீக்கப்பட்டு பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்.
இந்திய அணி விபரம்:
லோகேஷ் ராகுல் (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, ஷர்துல் தாகூர், பிரஷித் கிருஷ்ணா
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement