வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்,-அமெரிக்காவில் பச்சிளம் குழந்தையை, 50 இடங்களில் எலி கடித்ததால், பலத்த காயங்களுடன் அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பராமரிப்பில் அலட்சியமாக செயல்பட்ட பெற்றோர், அத்தை ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி டேவிட் – ஏஞ்சல் சோனாபம். இந்த தம்பதிக்கு ஆறு மாத ஆண் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி டேவிட் போலீசுக்கு போன் செய்து, தன் ஆறு மாத குழந்தையை எலி கடித்து விட்டதாக கூறினார்.
விரைந்து வந்து போலீசார் பார்த்தபோது குழந்தையின் கை, கால் விரல்கள் எலியால் கடித்து குதறப்பட்ட நிலையில், 50 காயங்கள் இருந்தன.
இதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டை சுற்றி பார்த்தபோது குப்பை மற்றும் எலிக்கழிவுகள் நிறைந்து காணப்பட்டன.
இதையடுத்து குழந்தை வளர்ப்பில் அலட்சியமாக செயல்பட்ட பெற்றோர் மற்றும் குழந்தையின் அத்தை டேலியானா துர்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட குழந்தையை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement