ஆஸ்திரேலியாவுக்கு வாழ்வா? சாவா? போட்டி
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதால், இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்பந்தத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. பாட் கம்மின்ஸ் இப்போட்டியில் விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வெற்றி பெற்ற அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணி அதிரடி ஆட்டம்
இந்தூர் மைதானம் மிகச் சிறிய மைதானம். அதிரடியாக விளையாடி அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதனை தெரிந்து வைத்திருந்த இந்திய அணி வீரர்கள் சுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோர் அதிரடியாக ரன்களை குவித்தனர். அவர்கள் இருவரும் அபாரமாக ஆடியதால் சதமும் அடித்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 86 பந்துகளில் சதம் அடித்தார். கில் 92 பந்துகளில் சதம் அடித்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 200 ரன்களை சேர்த்தது.
மிடில் ஆர்டரில் அபாரம்
ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களிலும், கில் 104 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து வந்த இஷான் 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அவுட்டானார். இதன்பிறகு தான் ஆட்டம் உட்சபட்ச சூடுபிடித்தது. சூர்யகுமார் மற்றும் கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப் போட்டி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் வாணவேடிக்கை காட்டினர். ராகுல் 38 பந்துகளில் 52 ரன்கள் விளாசி அவுட்டானார். அவருக்கு அடுத்தபடியாக சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 399 ரன்கள் குவித்தது. அதாவது ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணி தோல்வி
சேஸிங் தொடங்கியதும் இந்திய அணி பந்துவீச்சிலும் கெத்துகாட்டியது. பிரசித் கிருஷ்ணா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்த ஆஸ்திரேலியா தடுமாறத் தொடங்கியது. ஆனால் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தாலும், அஸ்வின் பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆனார். அந்த பந்து இன்சைட் எட்ஜாக இருந்தது. ரிவ்யூ எடுத்திருந்தால் அவுட் இல்லை என வந்திருக்கும். ஆனால் அதனை அவர் செய்யாமல் வெளியேறிவிட்டார். பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆஸ்திரேலிய அணிக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முடிவில் ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவரில் 217 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR