சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (25) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சூ (ர்யபெணாழர) கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை மகளிர்; அணி வெற்றி பெற்றால், வரலாற்றில் முதன்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை பெண்கள் அணி தங்கப் பதக்கம் வெல்லும். தோல்வியடைந்தால், மகளிர் அணி ஆசிய வெள்ளிப் பதக்கத்தைப் பெறுவார்கள்.