ஆசிய விளையாட்டு: இன்றும்(செப்.,25) அசத்தும் இந்தியா!| 19th Asian Games 2023: Air rifle World record India!

ஹாங்சு: ஆசிய விளையாட்டுப் போட்டியில், இன்று(செப்.,25) துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கமும், நால்வர் துடுப்பு படகு போட்டியில் வெண்கலமும் பெற்றுள்ளது.

சீனாவின் ஹாங்சு நகரில் ஆசிய விளையாட்டு 19வது சீசன் நடக்கிறது. இன்றும்(செப்.,25) இந்திய வீரர்கள் வேற லெவலில் பட்டையை கிளப்பி வருகின்றனர்.

துப்பாக்கி சுடுதல்

ஆசிய விளையாட்டுப் போட்டி, 10 மீ., ஏர் ரைபிள்(துப்பாக்கி சுடுதல்) பிரிவில், இந்திய அணி தங்கம் வென்றது. திவ்யான்ஷ் சிங், ருத்ரங்காஷ் பாலசாகேப், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் அணி தங்கம் வென்றது. 1893.7 புள்ளிகள் பெற்று உலக சாதனை பெற்றுள்ளனர்.

தனிநபர் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

அதேபோல், ஆண்கள் 25 மீ ரேபிட் பைல் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் விஜய்வீர் சிங், ஆதர்ஷ் சிங், அனீஷ் பன்வாலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது.

துடுப்பு படகு போட்டி

நால்வர் துடுப்பு படகு போட்டியில் யஷ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார், ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது. அதேபோல், துடுப்பு படகு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பாபு லால் யாதவ், லெக் ராம் ஜோடி வெண்கலம் வென்றது.

10 பதக்கங்கள்

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று(செப்.,24) இந்தியாவுக்கு 3 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன. இன்று ஒரு தங்கம், 4 வெண்கலம் வென்றது. இதன்மூலம் ஒரு தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் இந்தியா, பதக்க பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.