புதுடெல்லி: இந்தியாவில் லேப்டாப் உட்பட ஐடி ஹார்டுவேர் தயாரிப்புகளுக்கான உதிரிபாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதிக்கு மத்திய அரசு விரைவில் கட்டுப்பாடுகள் கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஐடி ஹார்டுவேர் உதிரிபாகங்கள் தயாரிப்பு உள்நாட்டில் பல மடங்கு உயரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
தற்சமயம் ஐடி ஹார்டுவேர் தயாரிப்புகளுக்கான உதிரிபாகங்கள் உள்நாட்டிலிருந்து 1 பில்லியன் டாலர் மதிப்பில் பெறப்படுகிறது. சீனாவிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு கொண்டு வரும்பட்சத்தில் உள்நாட்டு கொள்முதல் 20 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.