வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு,-தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு விவசாயிகள், கன்னட அமைப்பினர் பெங்களூரில், ‘பந்த்’ நடத்த அழைப்பு விடுத்துள்ளதால் தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்த முடிவு செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கரும்பு விவசாயிகள், கன்னட அமைப்பினர் நாளை பெங்களூரில், ‘பந்த்’ நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையடுத்து தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் தமிழக பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
முன்னதாக நேற்று மாண்டியாவில் விவசாயிகள் நேற்று ‘பந்த்’ நடத்தினர். கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement