குறைந்த பட்ஜெட்டில் பெஸ்ட் 5G மொபைல்கள்… தள்ளுபடிகளை பயன்படுத்திக்கோங்க மக்களே!

Best Budget 5G Smartmobiles: இப்போது ஸ்மார்ட்போன் சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே அதிக தேவை உள்ளது. உங்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோருக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கோ புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற 5G ஸ்மார்ட்போனை வாங்க நினைத்தால், இந்தக பதிவை முழுமையாக படியுங்கள்.

இன்று இதில் உங்களுக்கு சில சமீபத்திய 5G ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் இங்கே காணலாம். அதன் விலை பட்ஜெட்டுக்குள் இருக்கும். மேலும், இந்த போன்கள் அனைத்தும் அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளன. இது மட்டுமின்றி, அமேசான் இந்த 5ஜி ஸ்மார்ட்போன்களில் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது. குறைந்த விலையில் நல்ல சிறப்பம்சங்கள் நிறைந்த 5G ஸ்மார்ட்போன்களை இங்கே காணலாம். 

Redmi Note 12 5G

Redmi Note 12 5G மொபைல், 4GB RAM மற்றும் 128GB Internal memory வகையை அமேசானில் இருந்து 16,999 ரூபாய்க்கு வாங்கலாம். இருப்பினும், அமேசான் நிறுவனம் இந்த மொபைலுக்கு பல சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது.

ஹெச்டிஎப்சி வங்கி கார்டு மூலம் இந்த மொபைலை வாங்கினால், 2000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும், அதன் பிறகு நீங்கள் இதே மொபலை 14,999 ரூபாய்க்கு வாங்கலாம். நீங்கள் மாதத் தவணையில் போனை வாங்க விரும்பினால், அதன் ஆரம்ப மாதத் தவணை ஆப்ஷன் 824 ரூபாய் இருந்து தொடங்கும், இது உங்கள் பட்ஜெட்டில் இருக்கும். 

நீங்கள் பயன்படுத்தும் தற்போதைய மொபலை எக்ஸ்சேஞ் செய்தால், அமேசான் நிறுவனம் ரூ.16,149 வரை தள்ளுபடி செய்யும். மொபைலின் சிறப்பம்சங்கள் பற்றி பார்த்தால், இதில் 120Hz AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 4 Gen 1 செயலி, 48MP கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

Realme Narzo 60 5G

Realme Narzo 60 5G மொபைலில் 8GB RAM மற்றும் 128GB Internal Memory வேரியன்ட் அமேசானில் 17,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இருப்பினும், அமேசான் நிறுவனமானது போனில் ரூ.1000 தள்ளுபடி கூப்பனை வழங்குகிறது, அதன் பிறகு இதே மொபலை 16,999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த போனில் ஆரம்ப மாதத் தவணை ஆப்ஷன் 873 ரூபாயில் இருந்து வழங்கப்படுகிறது. 

எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ், இந்த Realme போனில் ரூ.16,350 வரை தள்ளுபடி பெறலாம். இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி பார்த்தால், போனில் 90Hz Super AMOLED டிஸ்ப்ளே, Mediatek Dimensity 6020 செயலி, 64MP கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

Lava Blaze 5G 

Lava Blaze 5G இந்த பட்டியலில் உள்ள மலிவான மொபைல் ஆகும். இந்த மொபைலில் 4GB RAM மற்றும் 128GB Internal Memory வேரியன்டை அமேசானில் இருந்து 10,999 ரூபாய்க்கு வாங்கலாம். வங்கி சலுகையின் கீழ், 1,750 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இது தவிர, 533 ரூபாயில் இருந்து இதனை மாதத் தவணை ஆப்ஷன் மூலமாகவும் வாங்கலாம். இதன் அம்சங்களைப் பார்த்தால், Lava 5G போனில் 90Hz டிஸ்ப்ளே, Mediatek Dimensity 700 பிராசஸர், 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.