`சிம்பு – ஐஸ்வர்யா ராய் – கே.வி.ஆனந்த் படம் அறிவிக்கப்படாதது ஏன்?' – பகிரும் கபிலன் வைரமுத்து

ஒளிப்பதிவாளர், இயக்குநர் எனப் பன்முகங்களைக் கொண்டவர் ‘அயன்’, ‘கோ’,’கவண்’,’காப்பான்’ என திரைப்படங்களை பார்வையாளர்களுக்கு பரிசளித்தார். அவர்தான் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்.

விஜய் சேதுபதி நடிக்க இவர் இயக்கியிருந்த ‘கவண்’ திரைப்படத்தில் ஊடகம் குறித்து பேசியிருப்பார்கள். ‘கவண்’ திரைப்படம் குறித்தும் ,அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார் , ‘எழுத்தாளர்’ கபிலன் வைரமுத்து. அந்த பதிவு குறித்து அவரிடம் பேசுகையில் ‘கவண்-2’, நவரசாவில் கே.வி.ஆனந்த் என அந்த உரையாடல் நீண்டது.

அவர், ” இப்போ இருக்கிற சமூக வலைதளங்களைப் பத்தியும், யூடியூப் கலாசாரம் பத்தியும் ஒரு ஐடியாவை கே.வி.ஆனந்த் சார்கிட்ட சொன்னேன். அந்த ஐடியா அவருக்கு பிடிச்சிருந்தது. அதை ‘கவண்-2’-வாக பண்ணலாம்ன்னு சொன்னார். கவண் திரைப்படம் டி.வி மீடியாக்களைப் பற்றியது. அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களைப் பத்தி பண்ணலாம்ன்னு ஒரு ஒன் லைன்னும் சொன்னேன். முதலில் வேறு சில கதைகள் பேசிட்டு இருந்தோம். அதையெல்லாம் முடிச்சிட்டு இந்த ஐடியாவைப் பண்ணலாம்ன்னு அவர் வச்சிருந்தார். ஐந்து கதைகள்கிட்ட நாங்க டிஸ்கஸ் பண்ணோம். அதுல ஒரு அரசியல் பிண்ணனி கொண்ட கதை நடக்கிற சூழலில் வரைக்கும் நகர்ந்துச்சு. அதுல சிம்புவையும், ஐஸ்வர்யா ராயையும் நடிக்க வைக்கலாம்ன்னு தொடக்கத்துல பேச்சுவார்த்தை நடந்தது. நானும் அவரும் சேர்ந்து கதை, திரைகதைல வேலை பார்த்தோம். அதுக்கு பிறகுதான் கொரோனா காலகட்டம் தொடங்குச்சு.

கபிலன் வைரமுத்து

வரலாற்றுக் கதை, ‘கவண்-2’ன்னு கிட்டதட்ட 5 கதைகள்ல வேலை பார்த்தோம். அதை ஒன் பை ஒன்னா பண்ணலாம்ன்னு வச்சிருந்தோம். இந்தக் கதைகள் எல்லாமே அவருடைய தலைமையில, அவரோட பார்வையில வெளிவந்திருந்தால் நிச்சயமாக பெரியளவில் வரவேற்பைப் பெற்றிருக்கும். ‘கவண்- 2’ திரைப்படத்துக்கு ‘மார்க் ஸக்கர்பெர்க்’, பழைய ட்விட்டர் சி.இ.ஒ ‘ ஜாக் டார்சி’, ‘எலான் மஸ்க்’ ன்னு மூணு நபர்களை சேர்த்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்த வடிவமைச்சிருந்தோம். இந்த கதாபாத்திரம் இந்த கதைல ஒரு மைய கதாபாத்திரம் மாதிரியானது. என்னுடைய ‘மெய்நிகரி’ நாவலைப் படிச்சிட்டு இந்தக் கதையை படமா பண்ணலாம்ன்னு ஆர்வத்தோட இருந்தார். அதுக்குப் பிறகு நான், எழுத்தாளர் சுபா, கே.வி. ஆனந்த சார்ன்னு எல்லோரும் அந்தத் திரைக்கதைல வேலை பார்த்தோம். கே.வி சாரே ஒரு போட்டோ ஜர்னலிஸ்ட்தான். அவரால ‘கவண்’ படத்தோட கதைல சுலபமாக கனெக்ட்டாகி வேலை பார்க்க முடிஞ்சது. அவரும் ரொம்ப ஈடுபாட்டோட அந்தக் கதைல வேலை பார்த்தார். வசனங்கள் எழுதுறதுக்கு எனக்கு பெரியளவுல சுதந்திரம் கொடுத்தார்.

கவண் திரைப்படத்தை பண்றதுக்கு ஒரு தைரியம் வேணும். ஒரு கமர்ஷியல் படம் பண்ணும்போது மீடியாவோட ஆதரவு நிச்சயமா தேவைப்படும். ஆனா, அந்த படத்துல ஊடகத்திற்கு பின்னால நடக்குற சமூக விரோதமான விஷயங்கள், சமூகத்துக்கு ஆதரவான ஊடகம்ன்னு ரெண்டு வகையையும் காட்சிப்படுத்தியிருந்தோம். இருந்தாலும் அந்த கதைய திரைப்படமா பண்றதுக்கு ஒரு தைரியம் வேணும். அது கே.வி சார்கிட்ட இருந்துச்சு. சமூக வலைதளங்கள், அதற்கு பின்னால் நடக்கக்கூடிய விஷயங்கள் பத்தியும், சமூக வலைதளங்களோட முதலாளிகளை பத்தியும் பேசுற படம் ‘கவண் -2’ . அந்தக் கதை இப்போ வந்த நிச்சயம் தொடர்புடையதாக இருக்கும். இந்த சப்ஜெக்டை புரிஞ்சுகிட்டு இயக்குற இயக்குநர் கிடைக்கும் போது இந்தக் கதையை படமா பண்ணுவோம்.

Director K.V Anand

இதுக்கு முன்னாடி ‘நவரசா’ ஆந்தாலஜியிலேயே நாங்க ஒரு பகுதி பண்ண வேண்டியது. அந்தத் எபிசோட் என்னோட ‘சிவநேசன்’ சிறுகதையை மையப்படுத்தியது. 1876ல ‘தாது வருட பஞ்சம்’ சென்னைல வந்துச்சு. அதுனால சென்னைல பலர் இறந்து போனாங்க. இந்த சம்பவத்தை புகைப்படம் எடுக்கிறதுக்கு வர்ற ஒரு பிரிட்டிஷ் ராணுவ போட்டோகிராபரை மையப்படுத்தியதுதான் அந்தச் சிறுகதை. அந்த போட்டோகிராபரோட பெயர் ‘ வில்லோபி வாலஸ் ஹூப்பர்’. அந்த சிறுகதைய திரைக்கதையாகவே மாத்தி நான் அவர்கிட்ட கொடுத்தேன். அவரும் அந்த கதைக்கான முதற்கட்ட பணிகளையெல்லாம் ஆரம்பிச்சுட்டாரு. இந்தக் கதையை படமா பண்றதுக்கு பெரிய கூட்டம் தேவைப்பட்டுச்சு. ஆனா, கொரோனா காலகட்டத்துல படப்பிடிப்பு தளங்கள்ல குறைவான ஆட்களைத்தான் பயன்படுத்தனும்ன்னு சில கட்டுபாடுகள் இருந்தது. அதுமட்டுமில்லாம, அந்த கதைய படமா பண்றதுக்கு பெரிய பட்ஜட் தேவைப்பட்டுச்சு. அதுனாலதான் அந்த சமயத்துல இது நடக்கல.

மேலும்,” இப்போ நான் இந்தியன்-2 படத்துல வசன வேலைகளைப் பார்த்துட்டு இருக்கேன். சிலர் என்கிட்ட வந்து கேட்டாங்க. ‘இந்தியா’ ‘பாரத்’ன்னு பெயர் மாறப் போகுதே. நீங்களும் படத்தோட தலைப்பை மாத்திடுவீங்களா’ன்னு சிலர் என்கிட்ட கேட்டாங்க.

முதல்ல இந்தியா இன்னும் ,’பாரத்’ன்னு பெயர் மாறல. அப்படி மாறும்போது படத்தோட தலைப்பை பத்தி இயக்குநரும், தயாரிப்பாளரும் முடிவு பண்ணுவாங்க. ஆனா, நிச்சயமா இந்திய திரையுலகமே பெருமைப்படக்கூடிய படமா ‘இந்தியன் -2 ‘ இருக்கும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.