சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே ஜோடு குளி பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக வனப்பகுதிகளுக்கு சென்றவர்கள், அங்குள்ள புலி குத்தி முனியப்பன் கோயிலில் ஒரு இளம் பெண்ணின் உடல் கிடப்பதை பார்த்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை செய்ததில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் முகம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சிதைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவரின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. சடலத்தின் அருகே பெண்ணின் உடைகள் செருப்புகள் மற்றும் தாலிக்கொடி ஆகியவை கிடந்தன. இதனால் அந்த பெண் திருமணமானவர் என்பது உறுதியானது. இது குறித்து ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா நேரில் விசாரணை நடத்தினார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/police_line.jpg)
சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த நிலையில் தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவர் நேற்று இரவு சரணடைந்தார். பெங்களூருவில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வரும் இவர் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த கோகிலவாணி என்பவரை காதலித்து உள்ளார்.
கோகிலவாணி சேலம் அரியனூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பாராமெடிக்கல் நாலாவது ஆண்டு படித்து வந்தார். பெற்றோருக்கு தெரியாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துள்ளனர். நேற்று கோகிலவாணியை பார்ப்பதற்காக முரளி கிருஷ்ணா பெங்களூருவில் இருந்து சேலம் வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கோகிலவாணியை கொலை செய்து எரித்தது தெரியவந்துள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_25_at_8_00_50_AM.jpeg)
பின்னர் பெங்களூருக்கு சென்ற முரளி கிருஷ்ணா நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மகனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து சரணடைய வைத்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்வதற்கான காரணம் என்ன என்றும் இந்த கொலைக்கு வேற யாராவது உடனடியாக இருக்கிறார்களா என்பது குறித்தும் போலீஸார் முரளி கிருஷ்ணாவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY