பாஜக உடனான கூட்டணி முறிவு குறித்து #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹாஷ்டாக்குடன் அதிமுக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில கட்சிகளை ஸ்வாகா செய்து முன்னணி கட்சிபோல கெத்து காண்பித்து வரும் பாஜக, தமிழ்நாட்டிலும் இதே தந்திரத்தை கையாண்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் […]