வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: கடந்த ஜூன் – ஆகஸ்ட் காலகட்டத்தில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியுள்ளது என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Tamil_News_large_344054320230925170831.jpg)
இது தொடர்பாக, அமெரிக்கா தூதரகம் “எக்ஸ்” சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை: உலகளவில் 4ல் ஒரு இந்திய மாணவருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் விசா கிடைத்துள்ளது.
உயர்கல்வி கனவை நனவாக்க அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். கடந்த ஜூன் – ஆகஸ்ட் காலகட்டத்தில் 90 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 30,000 மாணவர்களை வரவேற்க பிரான்ஸ் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/gallerye_162149670_3440543.jpg)
2030ம் ஆண்டுக்குள் இந்திய மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கல்வியில் சிறந்து விளங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்தும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement