அயோத்தி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.
அதையடுத்து 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி வைத்தார். அடிக்கல் நாட்டினார். தற்போது கட்டுமானப்பணிகள் மூன்று ஆண்டுகளை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம், 2024 ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமர் கோவிலின் தரைத்தளத்தின் கட்டுமான பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும் என கட்டுமான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் ஏதேனும் ஒரு தேதியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.