“கோவிட்-ஐ விட கொடிய வைரஸ்: 5 கோடி பேர் இறக்கலாம்”: உலக சுகாதார மையம் எச்சரிக்கை| Disease X Could Bring Next Pandemic, Kill 50 Million People, Says Expert

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: கோவிட்-ஐ விட அடுத்ததாக வர இருக்கும் கொடிய வைரசால் 5 கோடி பேர் இறக்கலாம் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வர இருக்கும் கொடிய வைரசுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பெயரும் சூட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த 2019ல் பரவ துவங்கிய கோவிட் தொற்று மக்களை பாடாய் படுத்தி வந்தது. தற்போது போது சற்று குறைந்து, மக்கள் வாழ்க்கை நிலை சகஜமாகியுள்ளது. இந்நிலையில், கோவிட்-ஐ விட கொடிய வைரஸ் பாதிப்பு வர இருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

வாய்ப்பு அதிகம்

இது குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வர இருக்கும் தொற்று டிசிஸ் எக்ஸ் (Disease X) என்பது கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்து உலகையே பயமுறுத்திக் கொண்டிருந்த கோவிட் 19 பெருந்தொற்றைக் காட்டிலும் மிக ஆபத்தான தொற்றாக இருக்கும் வாய்ப்பு அதிகம். இந்த தொற்று காரணமாக, சுமார் 5 கோடி பேர் இறக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வார்னிங்

இது குறித்து, பிரிட்டனின் கோவிட் வேக்சின் தலைவராகப் பணியாற்றிய டேம் கேட் பிங்காம் கூறுகையில், உலகில் அடுத்து ஏற்படும் தொற்று பாதிப்பால் 5 கோடி பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளது. கொரோனா தொற்றால் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதன் பாதிப்பே மிகவும் மோசமாக இருந்த நிலையில், இந்த புதிய நோய் பாதிப்பு அதை விட மோசமாக இருக்கும்.

உலக சுகாதார அமைப்பு இந்த அடுத்த தொற்றுநோயை “டிசிஸ் எக்ஸ்” (Disease X) என்று அழைக்கிறது. இப்போது 25 வைரஸ் பிரிவுகளிலும் கண்காணித்து வருகிறோம். இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்கள் இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று உருமாறினாலும் அது பெருந்தொற்றாக மாறும் வாய்ப்புகள் அதிகம்

5 கோடிபேர்

கடந்த 1918-19ம் ஆண்டு பரவிய ப்ளூ காய்ச்சல் காரணமாக, அப்போது சுமார் 5 கோடிப் பேர் உயிரிழந்தனர். அதற்கு இணையான பாதிப்பை இந்தப் புதுத் தொற்று ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.

மறுபுறம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்ப் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு டிசிஸ் எக்ஸ் பாதிப்பிற்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் முயற்சியிலும் பிரிட்டன் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க, இப்பொழுதே தடுப்பூசிகள் தயாரிக்கும் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.