சீன கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை இந்தியாவின் பாதுகாப்பே முக்கியம் சொல்கிறார் இலங்கை வெளியுறவு அமைச்சர்| Sri Lankan Foreign Minister says Indias security is important, not allowing Chinese ship

நியூயார்க், ”இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதால், சீன ஆய்வு கப்பலை எங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை,” என, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்து உள்ளார்.

நம் அண்டை நாடான இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தில், ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும், ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனா நிறுத்தியது; இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த உளவு கப்பல், இந்திய ராணுவ தளங்களை கண்காணிக்க வாய்ப்புள்ளதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கவலை தெரிவித்தது.

இதன் காரணமாக, உளவு கப்பல் வருகைக்கு முதலில் ஆட்சேபம் தெரிவித்த இலங்கை அரசு, பின், சீனாவின் நிர்ப்பந்தத்தால் அனுமதி அளித்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசுக்கு, இந்தியா மற்றும் சீனா பெருமளவில் பொருளாதார உதவிகள் செய்துள்ளன.

இரு நாடுகளும் சேர்ந்து, தொடர்ச்சி 4ம் பக்கம்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.