தைபே நகரம்,
தைவானின் பிங்டங் மாகாணத்தில் உள்ள கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிபர் சாய்-இங்-வென் உள்பட முக்கிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதில் அந்த தொழிற்சாலையில் ஆர்கானிக் பெராக்சைடு என்ற அபாயகரமான வேதிப்பொருளை அளவுக்கு அதிகமாக, இருப்பு வைத்திருந்தது தெரிய வந்தது. 100 டன் மட்டுமே வைக்க வேண்டிய இந்த வேதிப்பொருளை அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் சுமார் 3 ஆயிரம் டன் அளவுக்கு சேமித்து வைத்திருந்தனர். இதனால் அந்த தொழிற்சாலைக்கு சுமார் ரூ.62 லட்சம் அபராதம் விதித்து அரசாங்கம் உத்தரவிட்டது.