பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்ற காவல் அக்.,10 வரை நீட்டிப்பு| Pakistan: Imran Khans judicial remand in Cipher case extended till Oct 10

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத்: “ஊழல் வழக்கில் சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு, நீதிமன்ற காவல் அக்., 10 வரை நீட்டித்து பாக்., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் சட்டங்களின்படி உயர் பதவியில் உள்ளவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் உள்ளிட்டோர் வழங்கும் பரிசு பொருட்களை, ‘தோஷகானா’ எனப்படும் அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்த சில பொருட்களை, இம்ரான் கான் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு வெளியே விற்றதாக புகார் எழுந்தது.

இந்த ஊழல் வழக்கில், நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 70, கைது செய்யப்பட்டு அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இம்ரான் கானுக்கு, நீதிமன்ற காவல் அக்., 10 வரை நீட்டித்து, இன்று(செப்., 26) பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேறு சிறைக்கு மாற்றம்

இதற்கிடையே, உடல்நலத்தை கருத்தில் கொண்டு, ஏ- வகுப்பு வசதிகள் கொண்ட சிறைக்கு மாற்றும் படி இம்ரான்கான் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (செப்., 25) அவரை ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றுவதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.