யார் சதம் அடித்தாலும் சரி.. உலக கோப்பை வெல்வது மட்டும் தான் குறி -ரோஹித் சர்மா கூறியது என்ன?

உலகக் கோப்பை கிரிக்கெட் செய்திகள்: ஐசிசி உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. மகேந்திர சிங் தோனியின் தலைமையில் டீம் இந்தியா 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று தந்த அந்த தருணத்தை போல, மீண்டு ஒரு வரலாற்று சாதனையை ரோஹித் தலைமையிலான இந்திய அணி செய்யும் என பல கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையில் 2023 உலகக் கோப்பைக்கான ஏற்பாடுகள் குறித்து இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். 

50 ஓவர் உலகக் கோப்பை வெல்வது தான் முக்கியம்
பத்திரிக்கையாளர் விமல் குமாருக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், “உலக கோப்பை மிக முக்கியமான கோப்பை, நான் உலக கோப்பை மட்டும் தான் பார்கிறேன். அதாவது சகோதரனை மட்டுமே பார்க்கிறேன், முகத்தை பார்க்கவில்லை, மூன்று தூண்கள் தாங்கி நிற்கும் உலக கோப்பையை நான் பார்க்கிறேன். அதன் மீது மட்டும் கண்கள் உள்ளது. அதையே பார்க்கிறேன். ஏனென்றால் நான் உலகக் கோப்பையை வென்றதில்லை. நான் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளேன். ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை என்பது 20 ஓவர் உலகக் கோப்பை போல அல்ல. இது மிகவும் சவாலானது. மேலும் 50 ஓவர் உலகக் கோப்பை வெல்வது என்பது சிறப்பானது. ஏனென்றால், முதல்முறையாக உலகக் கோப்பை போட்டி நடந்தபோது, ​​50 ஓவர் உலகக் கோப்பை மட்டுமே விளையாடப்பட்டது. என்னைப் பொறுத்தவரை, உலகக் கோப்பை என்று வரும்போது, ​​இந்தியா இதுவரை 1983 இல் மற்றும் 2011ல் என இரண்டு உலகக் கோப்பைகளை வென்றுள்ளோம், அப்போது நடந்த விஷயங்கள் மனதில் உள்ளன. 1983-ல் உலககோப்பை நடந்த போது நான் அப்போது பிறக்கவில்லை என்றாலும், அதன் காணொளியை பார்த்திருக்கிறேன். அதன்மூலம் உலகக் கோப்பையின் போது நடந்த நல்ல விஷயங்கள், வெற்றி பெற்ற கடினமான போட்டிகள் என எல்லாம் நினைவில் இருக்கிறது என்றார். 

சாத்தியமற்றதைச் சாத்தியமாக்க வேண்டும்
2011 உலகக் கோப்பை அணியில் இடம் பெறாதது குறித்து ரோஹித் கூறுகையில், ‘அதைப்பற்றி எல்லாம் நான் ரொம்ப அதிகமாக சிந்திப்பதில்லை. விளையாட்டை பொறுத்தவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டு வரலாம், எந்த வயதிலும், எந்த நேரத்திலும் நீங்கள் மீண்டு வரலாம். நான் வேறு யாருக்கும் இல்லை என்பதை நிரூபிக்க. 2011 உலகக் கோப்பை தொடரின் போது நான் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, இனி எந்த உலகக் கோப்பையிலும் விளையாட முடியாது என்று நான் நினைக்கவில்லை. இப்போது இது எனது மூன்றாவது உலகக் கோப்பை. உலகில் சில விசியங்கள் சாத்தியமற்றதாகத் தோன்றும், ஆனால் சாதிக்கலாம். சாத்தியமற்றதைச் சாத்தியமாக்க, உங்கள் மீதும் உங்கள் திறன்களிலும் நீங்கள் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்றார்.

நாம் கோப்பையை வெல்ல வேண்டும்- ரோஹித் உறுதி
2019 உலகக் கோப்பை தொடரைக் குறித்து ரோஹித் கூறுகையில், “நான் நன்றாக விளையாட வேண்டும், நல்ல ஃப்ரேமில் இருக்க வேண்டும் என்று தான் களம் இறங்கினேன். 2019ல் நன்றாக பயிற்சி செய்தேன், நல்ல ஃப்ரேமில் இருந்தேன், என்னால் எவ்வளவு நன்றாக விளையாட முடியுமோ அவ்வளவு நன்றாக விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதுவெல்லாம் 2019, இப்போது நாம் 2023 இல் இருக்கிறோம், கடந்த முறை நான் ஐந்து சதங்கள் அடித்தேன், ஆனால் நாங்கள் அரையிறுதியில் தோற்றோம். இது போன்ற ஒன்று இந்தமுறை நடக்க நாங்கள் விரும்பவில்லை. நான் ஐந்து சதங்கள் அடித்தாலும் சரி, ஒரு சதம் அடித்தாலும் சரி அல்லது சதம் அடிக்கவில்லை என்றாலும் சரி, 2019 உலகக் கோப்பை தொடரை போல் எல்லாம் இருக்கக்கூடாது. இந்தமுறை நாம் கோப்பையை வெல்ல வேண்டும். நான் சதம் அடித்தாலும், அணியில் இருக்கும் வேற வீரர்கள் சதம் அடித்தாலும் சரி, நாம் கோப்பையை வெல்ல வேண்டும் என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.