IND vs AUS: இதுதான் நாளைய பிளேயிங் லெவன்… ஆஸ்திரேலியா அடக்கம் செய்ய இந்தியா ரெடி!

IND vs AUS, 3rd ODI: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்று தொடரையும் கைப்பற்றியது. உலகக் கோப்பை தொடருக்கு முன் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி சர்வதேச போட்டியாகும்.

யார் யாருக்கு ஓய்வு?

முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வில் இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சிராஜ், பும்ரா ஆகியோர் நாளைய (செப். 27) மூன்றாவது போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்சர் படேல் காயத்தில் இருந்து விலகியுள்ளதால் அஸ்வின் அணியில் தொடர்வார் என தெரிகிறது.

மேலும், சுப்மான் கில் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு நாளைய போட்டியில் ஓய்வில் அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, ரோஹித் உடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து களமிறக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இதில், இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக வந்துவிடுவதால் ராகுலுக்கும் ஓய்வளித்து சூர்யகுமாருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

யாருக்கு பதில் யார்?

இல்லையெனில், குல்தீப், அஸ்வின் என இரண்டு ஸ்பின்னர்கள் வருவதால் ஜடேஜாவுக்கு ஓய்வளித்து அந்த இடத்தில் சூர்யகுமாரை களமிறக்கவும் வாய்ப்புள்ளது. இந்தியாவின் அனைத்து வீரர்களும் தற்போது ஃபார்மில் இருப்பதால் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது ரோஹித் – டிராவிட் இணைக்கு தலைவலி தான். இருப்பினும், இந்திய அணி இது நாள் வரை உலகக் கோப்பைக்கான தங்களின் தயாரிப்பு குறித்து பேசியதில் இருந்து சில கணிப்புகளை நாம் தேர்வு செய்ய இயலும். 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் என எடுத்துக்கொண்டால் விராட், ஷ்ரேயாஸ், கேஎல் ராகுல் என்பதே முதன்மையான தேர்வாக இருக்கும். ஒருவேளை மிடிலில் இடதுகை வீரர் வேண்டும் என்றால் இஷானை ஒருவருக்கு பதில் கொண்டு வரலாம், இருப்பினும் அது மற்ற வீரர்களின் ஃபார்மை பொறுத்துதான். மேலும், மற்ற வீரர்கள் சொதப்பினால் மட்டுமே சூர்யகுமாருக்கே இடம் கிடைக்கும். 

ஏனென்றால், சூர்யகுமார் – இஷான் என இரண்டு பேரில் இடது கை வீரர் என்பதால் இஷானை இந்திய அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. ஹர்திக் பாண்டியா – ஜடேஜா ஆகியோர் ஆஸ்தான ஆல்-ரவுண்டராக இருப்பதால் அவர்களை தவிர்ப்பது கடினம். 6ஆவது பந்துவீச்சாளர் உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரில் நிச்சயம் தேவை. நாளைய போட்டியில் கில், ஷர்துலுக்கு ஓய்வளிக்க அதிக வாய்ப்பு இருப்பதால் இஷான், அஸ்வின் ஆகியோர் அணியில் இடம்பெறுகின்றனர். 

IND vs AUS 3rd ODI: பிளேயிங் லெவன்

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல்/சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் சிங், அஸ்வின், சிராஜ், பும்ரா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.