சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து பிரம்மாண்டமான பிரமோஷனை செய்துள்ளனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/collage-1695708424.jpg)