ஹாங்சு: ஆசிய விளையாட்டில் இன்று (செப்.,27) 50 மீ., ரைபிள்-3 பிரிவில் இந்திய அணி மேலும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றது.
சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதில் நேற்று வரை இந்தியா 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல், மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றத்தில் தங்கம் வென்றது. இதன்மூமல் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் 6வது இடத்தில் இருந்தது.
இன்று நடைபெற்ற 50 மீ., ரைபிள்-3 பிரிவில் ஆஷி சவுக்சி, மானினி கவுஷிக் மற்றும் சிப்த் கவுர் சாம்ரா அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 15 ஆனது. துப்பாக்கி சுடுதல் 25 மீ., மகளிர் ரேபிட் பிரிவில் இந்தியாவின் மனு பாகெர், ஈஷா சிங், ரிதம் சங்வான் ஆகியோர் அடங்கிய அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement