பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று சென்றிருந்தார். இரண்டாம் நாளான இன்று ரூ.5,206 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் அங்கு தொடங்கி வைத்தார். இதற்கான விழா சோட்டா உதேபூரில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி, “ஏழை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க நான் எப்போதும் முயன்று வருகிறேன். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நான்கு கோடி வீடுகளை எனது அரசு கட்டிக் கொடுத்ததில், இன்று நான் திருப்தி அடைகிறேன்.
முந்தைய அரசுகளைப்போல் ஏழைகளுக்கு வீடு என்பது வெறும் வார்த்தையல்ல. ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து அவர்களுக்கு கௌரவம் அளிக்க பாடுபடுகிறோம். ஏழைகளின் தேவைக்கேற்ப, அதுவும் இடைத்தரகர்கள் இல்லாமல், வீடுகளைக் கட்டி வருகிறோம். லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்றளவும் எனது பெயரில் ஒரு வீடுகூட கிடையாது. ஆனால், லட்சக்கணக்கான பெண்களின் பெயரில் என் அரசு வீடுகளை உரிமையாக்கியிருக்கிறது.
குஜராத் மாநிலத்தின் ‘வித்யா சமிக்ஷா கேந்திரா’ என்று அழைக்கப்படும் கல்வித்துறையின் கட்டுப்பாட்டு மையத்தால், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா ஈர்க்கப்பட்டிருக்கிறார். நாடு முழுவதும் இது போன்ற மையங்களைத் தொடங்குமாறும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்தத் திட்டத்தில் உலக வங்கியும் ஒரு பகுதியாக இருக்கத் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த முப்பது ஆண்டுகளாக இழுபறியில் இருந்த புதிய தேசியக் கல்விக் கொள்கை (NEP) இறுதியாக எனது அரசால்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. நான் முதல்வராகும் வரை குஜராத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் எந்த அறிவியல் பள்ளியும் செயல்படவில்லை. அறிவியல் பள்ளிகள் இல்லையென்றால் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் எப்படி கல்விப் பெறுவீர்கள்?” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.