காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு?: 3 மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை| Link with Khalistan terrorists?: NIA raids 50 locations in 3 states

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 50 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் அங்கு, காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் இடையில் இன்று மோதலில் இந்தியாவால் தேடப்பட்டு வந்த மற்றொரு பயங்கரவாதி சுக்தூல் சிங்கும் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்த நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கும் நபர்கள் இருக்கும் இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ இன்று (செப்.,27) திடீரென சோதனை மேற்கொண்டது. பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.