“ `டெல்டாகாரன்' எனக் கூறிக்கொள்ளும் ஸ்டாலின், இதைச் செய்ய வேண்டும்!" – பிரேமலதா சொல்வதென்ன?

தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தே.மு.தி.க சார்பில், அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும், காவிரி நதிநீரை தரமறுக்கும் கர்நாடக அரசையும், பெற்றுத் தராத மத்திய அரசையும், தமிழக அரசையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசுகையில், 1968-ம் ஆண்டிலிருந்து, காவிரி நதிநீர் பிரச்னை போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்னை நடந்து கொண்டிருக்கிறதே ஒழிய, இதுவரைக்கும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

தஞ்சாவூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்

விவசாயிகள் கடனாளிகளாக மாறியிருக்கும் நிலையைக் காணும்போது, மிகவும் வேதனையாக உள்ளது. இத்தனைக் காலம் ஆட்சி செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள் தமிழகத்துக்கும், மக்களுக்கும் என்ன செய்தார்கள். காவிரி நதிநீர்ப் பிரச்னையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் ஒற்றுமையாகப் போராட்டம் நடத்துகிறார்கள். அந்த ஒற்றுமை தமிழக அரசிடம் ஏன் இல்லை.

எத்தனையோ பிரதமர்கள், முதல்வர்கள் வந்தாலும் ஆட்சி மாறியதே தவிர, காட்சி மாறவில்லை. இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்திக்க வைத்து காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும்.

தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக ஆளுநரிடம் தே.மு.தி.க சார்பில் கோரிக்கை மனு அளிக்கவிருக்கிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டெல்டாகாரன் எனக் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தியைச் சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்துக்கு உரிய தண்ணீரைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை போன்ற காரணங்களால் தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது. டெல்டாவில் தண்ணீரைச் சேர்த்து வைப்பதற்கு நடவடிக்கை இல்லை.

பா.ஜ.வும், அ.தி.மு.க-வும் பிரிந்து இரண்டு நாள்கள்தான் ஆகின்றன. எனவே பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் கிடையாது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே பிரச்னை கிடையாது. இரண்டு தலைவர்கள் இடையேதான் பிரச்னை. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால், யார் தலைமையில் கூட்டணி அமையும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். கூட்டணி தொடர்பான விஷயத்தில் தே.மு.தி.க உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.