நயன்தாராவுடன் சினிமாவில் நடிக்கும் கயல் சீரியல் நடிகை
டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் தேவி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் நடித்து வருகிறார். லோக்கல் தொலைக்காட்சியில் வீஜேவாக பணிபுரிந்து வந்த அவருக்கு கயல் தொடர் நல்லதொரு ஊடக வெளிச்சத்தை பெற்று தந்துள்ளது. தற்போது ஐஸ்வர்யாவுக்கென சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில், அவருக்கு தற்போது சினிமா வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. ஐஸ்வர்யா தற்போது 'மண்ணாங்கட்டி' என்ற படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், பட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். இதனையடுத்து ஐஸ்வர்யாவின் இந்த புதிய பயணத்திற்கு ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.