சென்னை புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்குச் சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து, புதிய அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கன்னியாகுமரி அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அ.தி.மு.க. […]