மைசூருவில் பிரமாண்ட ஊர்வலம்

மைசூரு

உலக சுற்றுலா தினம்

மைசூருவில் உலக சுற்றுலா தினம் மாவட்ட சுற்றுலாத்துறை, அரண்மனை மண்டலி சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் பிரமாண்ட ஊர்வலம் அரண்மனை வளாகத்தில் இருந்து மேள-தாளங்கள் முழங்க தொடங்கப்பட்டது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் தொடங்கி வைத்தார்.

அப்போது சுற்றுலா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு கலை குழுவினர்கள், பொம்மலாட்டம், செண்டை மேளம் முழங்க தசரா விழாவில் கலந்து கொள்வதற்கு வந்த 5 யானைகளை ஊர்வலமாக ராஜவீதியில் அழைத்துச் செல்லப்பட்டன.

முன்னதாக சுற்றுலா சங்கங்கள் சார்பில் மைசூரு அரண்மனை வளாகம் மற்றும் சுற்றுலா தளங்களில் வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு பூங்ெகாத்து, இனிப்பு வழங்கினர்.

சுற்றுலா நகரம்

ஊர்வலத்ைத தொடங்கி வைத்த பின்னர் கலெக்டர் ராஜேந்திர பிரசாத் பேசுகையில், உலக வரைபடத்தில் மைசூரு நகரம் சுற்றுலா தளமாக உள்ளது. மைசூரு நகரத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு எல்லா விதமான சலுகைகள் உள்ளன. அதனால் தான் மைசூரு சுற்றுலா நகரம் என்று புகழ் பெற்றிருக்கிறது.

சமீபத்தில் மைசூரு அருகே உள்ள பழமை வாய்ந்த சோமநாதபுர, கோமநாரீஸ்வரர் கோவிலை யுனெஸ்கோ பாரம்பரிய கோவிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மைசூரு நகரத்திற்கு மற்றொரு பெருமை கிடைத்துள்ளது.

மன்னர்கள் காலத்தில் மைசூரு நகரத்தில் பெரிய அளவிலான சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. மைசூருவுக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த விதமான குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் சுற்றுலா தளங்களை சந்தோஷமாக பார்த்து ரசித்துவிட்டு செல்ல வேண்டும்.

சுற்றுலா பயணிகள்

அந்த வகையில் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் குறைகூறும் வகையில் இருக்கக்கூடாது.

இன்று மைசூருவுக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு மைசூருபாக், பூங்கொத்து கொடுக்கப்பட்டது. அவர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கினர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மைசூரு மாநகராட்சி மேயர் சிவகுமார், மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ் பாத்தோடு, அரண்மனை மண்டல இயக்குனர் சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.