பியோங்யாங்: அணு சக்தி கொள்கையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக அரசியலமைப்பில் திருத்தங்களை வட கொரியா கொண்டுவந்துள்ளதாகக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியா அதிபராக கிம்ஜோங் உன் உள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் ரஷ்யா சென்ற வடகொரிய அதிபர், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ரஷ்ய ராணுவ தளவாடங்களை கிம்ஜோங் பார்வையிட்டார்.
இந்நிலையில் அணு ஆயுதங்களை உற்பத்தியை விரைவுபடுத்தும் விதமாக அணு சக்தி கொள்கை மேலும் தீவிரப்படுத்திட வகை செய்யும் அரசியலமைப்பு திருந்தங்களை கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த செயலை அமெரிக்க, தென்கொரியா கண்டித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement