ஆண்குழந்தைக்கு தந்தையான புவியரசு! மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு
ஜீ தமிழ் நடிகரான புவியரசு கடந்த 2021ம் ஆண்டு மோகன ப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருந்த அவர், சில தினங்களுக்கு முன் மெட்டர்னிட்டி போட்டோஷூட்டில் பறந்து பறந்து போட்டோ எடுத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் புவியரசு – மோகன ப்ரியா தம்பதியினருக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புவியரசு, 'உன் பிஞ்சு கைகளால் என் விரலை பிடித்திருப்பதை விட விலைமதிப்பானது எதுவுமே இல்லை' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.