வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தாண்டில் புலம் பெயர்ந்தோர் அல்லாத 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா விண்ணப்பங்களை பரிசீலித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா இடையேயான பரஸ்பரம் நட்புறவு தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வருகிறது. இதையடுத்து இந்தாண்டில் வேலைக்காக வழங்கப்படும், ‘எச்1பி விசா’ உள்ளிட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்தது.
இதையடுத்து 10 லட்சம் இந்தியர்களின் விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இது 2019 கோவிட் தொற்றுக்கு முன், 2022ம் ஆண்டு பரிசீலனை செய்யப்பட்ட விசா எண்ணிக்கையை விட 20 சதவீதம் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement